Wake up! Within.
Saturday, October 31, 2009
விடைத்தாளின் வெளிப்பாடு..
விடைத்தாள் திருத்துவது/விடைத்தாள் மதிப்பிடுவது
Paper Correction/Paper Valuation
விடைத்தாள் திருத்திட்டு இருந்தேன்... அதனால உன்னும் செய்யல...
ஒ....அங்க 10வது valuation போயிருந்தேன்...அப்ப பார்த்திருப்பீங்க...
இப்படி பேசுவது அறிந்திருப்பீர்கள்..
இது என்ன இரண்டிற்கும் வேறுபாடு...
விடைத்தாள் திருத்துவது என்பது ஆண்டின் நடுவில் திருத்தப்படும் விடைத்தாளில் மாணவர்கள் எழுதியதில் இதை நீ விட்டுவிட்டாய்..இந்த விடையின் எண் என்ன.. நீ சிலவற்றை எழுதவில்லை என கேள்விக்குறியிட்டு சுட்டி காட்டுவதோடு மதிப்பெண்களை போடுவதே விடைத்தாள் திருத்துவது Paper Correction எனச் சொல்லப்படுகிறது.
விடைத்தாள் மதிப்பிடுவது என்பது ஆண்டின் இறுதியில் அடுத்த வகுப்பிற்கு செல்லும் தேர்வின் விடைத்தாளில் எதுவுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை..ஏனென்றால் மாணவர்கள் இதை பார்க்க வாய்ப்பு இல்லை...ஆகையால் என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அதன் மதிப்பெண்களை மட்டுமே சுட்டிகாட்டபடுவதே விடைத்தாள் மதிப்பிடுவது Paper Valuation என சொல்லப்படுகிறது.
தவறுகளை திருத்த ஒரு வாய்ப்பாகவே இடையில் நடத்தப்படும் தேர்வுகள்...மதிப்பெண்கள் வந்தவுடன் ..மதிப்பெண்களை பார்த்து ஏன் டா/மா இப்படி வாங்கி இருக்கிற...இது எல்லாம் ஒரு மதிப்பெண்களா..என்று சொல்லுவது..நிறைய வாங்கிட்டா ..ம்ம்..இன்னும் வாங்கி இருந்திருக்கலாம்..
ரொம்ப அலட்சியமா இருக்கு போல உனக்கு ...ஏன் இப்படி கவனம் இல்லாம இருக்கிறாய்..என நாம் கேட்பதுண்டு.
இப்பொழுது கல்வித்திட்டத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சவே...போட்டி போட்டுக்கொண்டு....
அரசு பள்ளிகளோடு தனியார் பள்ளிகள்...
தனியார் பள்ளிகளோடு சிறப்பு தனியார் பள்ளிகள்...
சிறப்பு தனியார் பள்ளிகளோடு விளையாட்டின் வழியே கற்கப்படும் கல்வி...
இப்படி ஏட்டு கல்வியில் பல போட்டியின் இடையே ..இந்த பள்ளியில் நல்லா சொல்லித்தருவாங்க போல... அந்த பள்ளி.... இதை விட அந்த பள்ளி....எந்த பள்ளியாய் இருந்தாலும்..பாடத்திட்டம் ஒன்றாக தான் உள்ளது என்பதே உண்மை.அதனை சொல்லித்தரும் வகையில் தான் வேறுப்படுகிறது
இந்த பள்ளிகள்..இருந்தும் அம்மாவும் அப்பாவும் சொல்லி கொடுத்தால் தான் உயர வழி இருக்கிறது.
எந்த பாடமாக இருந்தாலும் அவர்கள் புரிந்து படிக்கிறார்களா..எனக் கேட்டு பாருங்கள்..எல்லா நாட்களும் செலவழிக்க முடியாவிட்டாலும்..விடுமுறை நாட்களிலாவது கேட்டு பாருங்கள்...
நிச்சயம் தெரிந்து இருக்கும் வாய்ப்பு 40% தான் உள்ளது..ஏட்டுக்கல்வி மதிப்பெண்கள் பெறவே வேகவேகமாக சொல்லித்தரப்படுகிறது.மிஸ்/சார் எழுதி போட்டாங்க..எழுதினேன்..சொல்லவில்லையே...
பள்ளி சென்று கேட்டால் உங்கள் மகன்/மகள் மெதுவாக இருப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல..என்பதே..
புரிந்து படிக்க வைத்தால் பின்னாளில் அவர்கள் வாழ்வில் உதவியாக இருக்கும்..மதிப்பெண்கள் வந்தவுடன் ..என்ன தப்பு பண்ணியிருக்கிறாய்... ஏன் புரியுல...அடுத்த முறை இப்படி எழுது சரியா..என்று சொல்லுங்கள்...வேறு ஒரு மதிப்பெண்களோடு ஒப்பிடுவதை தவிர்த்து நீ முதல எடுத்த மதிப்பெண்களோடு இதை பாரு...குறைந்து இருக்கிறாய் ...அடுத்த முறை நன்றாக எடுக்க வேண்டும் ...கூடி இருக்கிறாய்..வாழ்த்துகள்..என அவர்களோடு சில நேரம் செலவழித்து உயர்வடைய செய்வோம்.
ஏதோ தெரியாத ஒருவரிடம் பேசுவதற்கு முன்பும் பின்பும் கைக்கொடுத்து கொண்டு வாழ்த்துகிறோம்..ஆனால் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் கைகொடுப்பது என்பது ரொம்ப குறைந்த சிலரே...உனக்கு என்ன வேணும் என்றே முதலில் கேட்க தான் செய்கிறார்கள்..
ஒரு முறை சின்ன குட்டீஸ் மிஸ் (நான் ஏதோ எழுதிக்கொண்டோ புத்தகங்களை அடுக்கி கொண்டோ இருந்தேன்...)மிஸ் எனக்கு அம்மா கைகொடுத்தாங்களே...என்றான்.. என்ன டா சொல்லுற...புரியல என்றேன்...நீங்க good போட்டதை நான் சாப்பிட போனபோது அம்மா என் நோட்டு பார்த்து அழகாய் எழுதியிருக்கிறாய் good வாங்கியிருக்கிறாயே என்று சொல்லிக் கைக்கொடுத்தாங்களே...என்றான்...அவ்வளவு ஒரு சந்தோஷம்..அவன் முகத்தில்..அன்றிலிருந்து நன்று என போடுவதை அதிகமாக போடத் தொடங்கினேன்...
எதுவுமே வாங்கித் தரவில்லை என்றாலும் கைகொடுத்து உற்சாக படுத்துவோம்...பிள்ளைகளின் சந்தோஷத்தில் பங்கு கொள்வோம்.தவறை திருத்த வழிக்காட்டுவோம்..மதிப்பெண்களின் அவசியத்தை புரிய வைப்போம்..மதிப்பெண்கள் வந்தால் அம்மா அப்பா திட்டுவாங்க..என்ற மனநிலையை மாற்றிடுவோம்..பயத்தை அகற்றுவோம்....என்று சொல்லி இப்பதிவை முடித்து கொள்கிறேன்..நன்றிகள்
Subscribe to:
Post Comments (Atom)
//இப்படி பேசுவது அறிந்திருப்பீர்கள்..
ReplyDeleteஇது என்ன இரண்டிற்கும் வேறுபாடு...
விடைத்தாள் திருத்துவது என்பது ஆண்டின் நடுவில் திருத்தப்படும் விடைத்தாளில் மாணவர்கள் எழுதியதில் இதை நீ விட்டுவிட்டாய்..இந்த விடையின் எண் என்ன.. நீ சிலவற்றை எழுதவில்லை என கேள்விக்குறியிட்டு சுட்டி காட்டுவதோடு மதிப்பெண்களை போடுவதே விடைத்தாள் திருத்துவது Paper Correction எனச் சொல்லப்படுகிறது.
விடைத்தாள் மதிப்பிடுவது என்பது ஆண்டின் இறுதியில் அடுத்த வகுப்பிற்கு செல்லும் தேர்வின் விடைத்தாளில் எதுவுமே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை..ஏனென்றால் மாணவர்கள் இதை பார்க்க வாய்ப்பு இல்லை...ஆகையால் என்ன எழுதப்பட்டு இருக்கிறதோ அதன் மதிப்பெண்களை மட்டுமே சுட்டிகாட்டபடுவதே விடைத்தாள் மதிப்பிடுவது Paper Valuation என சொல்லப்படுகிறது.//
நல்ல தகவல் சரண்யா... நன்றி.......
//தவறுகளை திருத்த ஒரு வாய்ப்பாகவே இடையில் நடத்தப்படும் தேர்வுகள்...//
மிக மிக சரியான விளக்கம்...
//இது எல்லாம் ஒரு மதிப்பெண்களா..என்று சொல்லுவது..நிறைய வாங்கிட்டா ..ம்ம்..இன்னும் வாங்கி இருந்திருக்கலாம்..
ரொம்ப அலட்சியமா இருக்கு போல உனக்கு ...ஏன் இப்படி கவனம் இல்லாம இருக்கிறாய்..என நாம் கேட்பதுண்டு.//
இது போன்று எல்லோரும், எப்போதும் கேட்டதுண்டு..
//இப்பொழுது கல்வித்திட்டத்தில் ஒன்றை ஒன்று மிஞ்சவே...போட்டி போட்டுக்கொண்டு....
அரசு பள்ளிகளோடு தனியார் பள்ளிகள்...
தனியார் பள்ளிகளோடு சிறப்பு தனியார் பள்ளிகள்...
சிறப்பு தனியார் பள்ளிகளோடு விளையாட்டின் வழியே கற்கப்படும் கல்வி...//
ஆம்... இப்போது கல்வி வியாபாரமாகி ரொம்ப நாள் ஆச்சு சரண்யா.....
//எந்த பள்ளியாய் இருந்தாலும்..பாடத்திட்டம் ஒன்றாக தான் உள்ளது என்பதே உண்மை.அதனை சொல்லித்தரும் வகையில் தான் வேறுப்படுகிறது//
சரிதான்... அதிகம் சம்பளம் கொடுக்கும் பள்ளியில் டீச்சர் கொஞ்சம் அதிகப்படியா சொல்லி கொடுப்பாங்களோ??
//பள்ளி சென்று கேட்டால் உங்கள் மகன்/மகள் மெதுவாக இருப்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல..என்பதே..//
இது ஒரு ஸ்டான்டர்ட் ஆன்ஸர்...
//ஏதோ தெரியாத ஒருவரிடம் பேசுவதற்கு முன்பும் பின்பும் கைக்கொடுத்து கொண்டு வாழ்த்துகிறோம்..ஆனால் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் கைகொடுப்பது என்பது ரொம்ப குறைந்த சிலரே.//
நல்லா அப்ஸர்வ் பண்ணி இருக்கீங்க...
//அன்றிலிருந்து நன்று என போடுவதை அதிகமாக போடத் தொடங்கினேன்...//
நீங்க டீச்சரா மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்????!!!
//பிள்ளைகளின் சந்தோஷத்தில் பங்கு கொள்வோம்.தவறை திருத்த வழிக்காட்டுவோம்..மதிப்பெண்களின் அவசியத்தை புரிய வைப்போம்..மதிப்பெண்கள் வந்தால் அம்மா அப்பா திட்டுவாங்க..என்ற மனநிலையை மாற்றிடுவோம்..பயத்தை அகற்றுவோம்....என்று சொல்லி இப்பதிவை முடித்து கொள்கிறேன்//
ஒரு அருமையான பதிவு சரண்யா... வாழ்த்துக்கள்... நீங்கள் டீச்சர் என்றால், கு ஈவினிங் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் (மாலையில் இதை படித்தால்...)