இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்
நாமே முயலாமல்
பிறரை சாராமல்
நமக்கும் தளராமல்
கடவுளை வணங்காமல்
வெற்றி அடையாமல்
விதியை வெல்லாமல்
சாதிப்பது முடியுமோ.......
ஆகுமே எதுவாகுமே
எண்ணத்தை நல்குமே
சிந்தனையில் வருமே
கனவில் நிற்குமே
கருத்தாய் உருவாகுமே
காரியத்தில் இடம் பெறுமே
தள்ளாடலாமோ .??
தாத்தாவாக ஆனதாலா
சுறுசுறுப்பின் சிகரமன்றோ
ஓடி ஓடி உழைத்து கால்கள்
தளர்ந்து விட்டதோ
வாழ்ந்து வாழவைத்து வாழ்த்தி
வளம் பெற செய்தும்
தள்ளாடினாலும் ஆவலுடன்
எப்படியும் வாழ்த்தனும்
வருகை புரிந்த உமக்கு
பணிவான வணக்கங்கள்..
படர்ந்திடுமே கொடியாய்
மேலே வளர்ந்திடுமே
துணையோடு என்றுமே
தந்திடுமே திராட்சை
ச்சீ' ச்சீ' புளிக்குமே
விட்டதே அன்று நரி
காரணமாக தானே
இருந்தாமே உயரத்தில்...
இன்பம் நிலைத்திடுமன்றோ.............என்று
இசையோடு பல கனவுகளில் செல்கிறாள்
இளம்வயதிலே பிரிந்து புது மகளாய் புகுந்த
இல்லத்தை நோக்கி புது வாழ்வு மலர
இன்புற்று வாழ ...
இறையருள் உன்னோடு.....
இருக்கும் என்றே வாழ்த்தும் உற்றார் உறவினர்...
//ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[2] //
ReplyDeleteஆஹா...எனக்கே சவாலா என்று கேட்டபடி சவாலுக்கு தயார் என்று அறிவிக்கலாம் என்றிருந்தேன்...
இல்லை முடியாது என்று தெரிந்தபோது ஜகா வாங்கி விட்டேன்...
நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள் சரண்யா...
என் தீபாவளி பதிவினை வந்து பாருங்கள்... பதிவில் உங்களுக்கு ஒரு "மெகா பரிசு" இருக்கிறது... மறுக்காமல், மறக்காமல் வந்து பெற்று செல்லுங்கள்...
நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html
நன்றிகள்.....உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தீபஒளி நல்வாழ்த்துகள்....
ReplyDelete