அடுத்த வீட்டிற்கு நடந்தே
உடற் பயிற்ச்சிக்கு மிதிவண்டி
அடுத்த தெருவென்றால் விசையுந்து
பள்ளி மாணவர்கள் தானியிலே
சொகுசாய் செல்ல மகிழ்வுந்து
அனைவருடன் செல்ல தானூந்து
விழா என்றால் கூடு உந்துலே
சிறிய சுமை சிறியகூடு உந்துலே
பெரிய சுமை சுமையுந்துவிலே
நிறைய மக்கள் பேருந்திலே
வாய்ப்பு கிடைத்தால் தொடர்வண்டியிலே
அன்னார்ந்து பார்த்தால் வானூர்தி
இப்படி எங்கு சென்றாலும்
எதிலும் கவனம் முக்கியம்
பொறுமையாய் பயணித்து
விபத்தை தவிர்க்க
கைபேசியில் பேசியே
வாகனங்களை ஓட்டாமல்
பாதுகாப்பான பயணம் செய்து
நம் ஜீவனோடு இனிய
வாழ்வு வாழ்வோமே.....
அனைத்து உந்துகளை பற்றியும் எழுதி அசத்தி உள்ளீர்கள்...
ReplyDeleteநம் வாழ்க்கைக்கும் இது போன்றதொரு உந்து சக்தி தேவைப்படுகிறது...
வாழ்த்துக்கள் சரண்யா....