Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, October 3, 2009

அப்பாவின் அருமை

தன் சிறு வயதிலே நடந்தே சென்று பள்ளிப் படிப்பை முடித்து
பின்பு ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து மேலும் படிப்பை தொடர்ந்து
நல்ல வேலையில் தன்னை உயர்த்திக்கொண்டு....தன் வாழ்நாளில்
முதல் சன்மானத்தை அவர் அப்பாவிடம் கொடுத்த போது "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர.....
அப்பா செலவு செய்ய தொடங்குகிறார்....

கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனக்கு தேவையான பொருளை வாங்கி வைக்கிறார்.
தனக்கு ஒரு மகளோ/மகனோ பிறந்த பிறகு
ஒளி வீசத்தொடங்கியதாக ஓர் உணர்வு...

மகிழ்ச்சியோடு அப்பா பிள்ளையின் மீது அலாதியான பாசம் வைக்க தொடங்கிறார்.
அவர்கள் படிப்பதற்கு செலவு செய்கிறார்
பின்பு பார்த்து பார்த்து தன் குழந்தைகளுக்கு செய்யும் அப்பா தனக்காக ஒரு செலவையும்
செய்வதில்லை..ஏனோ!!!

வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்னுள் பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்)

மகனோ /மகளோ வேலைக்கு செல்வது /கல்யாணம் செய்து வைப்பது என மீண்டும் செலவு
செய்யும் அப்பா......
பின்பு அவர்களின் குழந்தை , பெயர் வைப்பது என....எல்லாச் செலவையும் தனியாளாக
சமாளித்து கொண்டும் சந்தோஷமாக சிரித்து கொண்டும் வாழும் அப்பா...

பேரனோ.... பேத்தியோ.....
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்துக்கொண்டு
இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா.... தாத்தாவாக,,,
(அம்மாவிடம் போய் கேட்பார் பால் இருக்கிறதா? வாங்கி கொண்டு வரவா?
பேரன் பேத்தி எதாச்சம் செய்து வைத்து இருக்கிறாயா....)

இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா.....

அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல.....
இப்படியே பார்த்து பார்த்து செய்யும் அப்பாவின் அருமை அவரின் வெளிக்காட்டாத கஷ்டம்...
அவருடைய கோபத்தை வெளிக்காட்டுவது அம்மாவிடம் மட்டுமே... (ஏனென்றால் அவரின் பாதி)
சமாளிக்கும் திறமை...
தனக்கென வாழாதவர்....
இப்படி பலவற்றில் அப்பா என்றுமே உயர்ந்து தான் நிற்கிறார்...
மகன் கொடுக்கும் போதும்.. அவர் அப்பா சொல்வதை போல் "வேண்டாம் உனக்கே
செலவு இருக்கும் உனக்கு வேண்டியதை வாங்கி கொள் என்பாராம்"

அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்...
அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை....

அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும்
இறைமையில் தன் பணி செய்து என்றுமே சுறுசுறுப்பாய் அப்பா....தாத்தாவாக பரிணமிக்கும் போதும்
மாறாத அந்த தேடல்....நடந்தே...இன்றும் நடைப்பயிற்சி என்று .....அனைவரையும் புரிந்து தான் வைத்திருப்பார் அப்பா....

அப்பாவின் அருமை அன்பிலே...
அதை நாம் புரிதலே....
இத்திரியிலே.....
அப்பாவின் பாதம் வணங்குவோம்
என்றும் அவரை போற்றுவோம்.

2 comments:

  1. ஓவியத்தில் திறமை காட்டிய சரண்யா, மறுபடியும் எழுத்தில் திறமை காட்டியுள்ளார்...

    அதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து...

    //பின்பு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்து தர.....
    செலவு செய்ய அப்பாவிற்கு ஆரம்பாகின்றன.....//

    கடைசியில் "ஆரம்பமாகின்றன" என்று வரவேண்டுமோ சரண்யா?

    //தனக்காக ஒரு செலவையும்
    செய்வதில்லை..ஏனோ!!!//

    அதையும் குடும்ப‌த்திற்காக‌வும், குழந்தைக‌ளுக்காக‌வும் செய்ய‌த்தானோ என்னவோ??

    //வளர்ந்தவுடன் மேற்படிப்புக்கு செலவு செய்யும் அப்பா.. (வெளிக்காட்டாத கஷ்டம் தன்க்குள்ளெ பூட்டி வைத்துக்கொள்ளும் ரகசியம்)//

    ச‌ரிதான்... த‌ன் சோக‌ம் த‌ன்னோடுதான் என்ப‌தால்... "த‌ன‌க்குள்ளே" என்ற வார்த்தையை ச‌ரி செய்ய‌லாமே...

    //பேரனோ.... பேத்தியோ.....
    வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பிடித்தை வாங்கி வைத்துக்கொண்டு
    இன்னும் வரவில்லை என்று காத்து கொண்டிருக்கும் அப்பா//

    அவர்களுக்கு "பிடித்ததை" என்று மாற்றுங்கள் சரண்யா...

    //இது தான் எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறதே...என்று நினைக்கிறீர்களா.....
    அப்பாவின் செலவுக்கு எல்லையில்லை போல.....//

    இது செல‌வு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌து அல்ல‌... சந்தோஷ‌ம் மற்றும் கடமை ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌து... இதையும் அவ‌ர் ம‌ன‌முவந்து தான் செய்வார்... அவர் தியாக‌த்தின் ம‌று உருவ‌ன்றோ?

    //அப்பா ஓர் அனுபவத்தின் பொக்கிஷம்...
    அக்கறை காட்டுவதில் அப்பாவிற்கு நிகர் எவருமில்லை....//

    உண்மையோ உண்மை... மிக‌வும் சிலாகித்து எழுதி இருக்கிறீர்க‌ள் ச‌ர‌ண்யா...

    //அப்பாவின் பாதம் வணங்குவோம்
    என்றும் அவரை போற்றுவோம். //

    அப்பாவின் பாத‌ம் ப‌ணிவோம்...அவ‌ரை எந்நாளும் போற்றி வ‌ண‌ங்குவோம்...

    வாழ்த்துக்கள் சரண்யா...

    ReplyDelete
  2. நன்றிகள் திரு கோபி அவர்களே....
    தொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கு....
    எழுதணும் தோணியது...
    அதனால் தான் ஆனால் கோர்வையாக வரவில்லையோ என்று தான் நினைத்தேன்...

    ReplyDelete