Wake up! Within.
Sunday, October 4, 2009
அம்மாவின் பாசம்
அம்மா அடுப்படியில் தன் வாழ்நாளில் முக்கால் வாசி வாழ்கிறார்...
ஆனாலும் அம்மாவை போல் அதிபுத்திசாலி உலகிலில்லை.
யார் யாருக்கு எது எது பிடிக்கும் என்று தெரிந்து இருப்பது அம்மாவின்
சமையல் சாம்ராஜ்ஜியத்தின் ரகசியம்....
யாருக்காகவும் விட்டுகொடுக்கமாட்டார் தனது ராஜ்ஜியத்தை...
எனினும் விட்டுகொடுக்கும் மனசு உடையவர் தான்
பார்த்து பார்த்து சமைத்து கொண்டிருப்பவர் தான் ஆனால் சீப்பு
காணாமல் போனால் கூட கேட்டால் சரியான இடத்தை சுட்டி
காமிப்பார் அம்மா...
தொலைக்காட்சியை பார்க்கமாட்டார்(கேட்டுபதோடு) எனினும் நம்மையும் மிஞ்சி
தகவலை கொடுப்பார்.
அம்மா ஓர் களஞ்சியம்...
நல்லவிதையை மனதில் விதைப்பவர்....
பழக்கத்தை சொல்லி கொடுப்பவர்....
(யாராவது விருந்தாளி வந்தால் .....வாங்க ன்னு கூப்பிட்டாயா? என்று ஒரு முறை கேட்டும் தெரிந்து கொள்வார்)
கவனத்தோடு கையாளுபவர்....
பார்த்து பார்த்து செய்பவர்...
அம்மாவும் அப்பாவிடம் தான் தன் கோபத்தை காட்டுபவர்....
சமாளிப்பிலே அம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே.
செல்லமாய் வளர்த்து
பெண்ணை திருமணம் செய்து வைத்து
அவள் ஓர் அம்மாவாக போது
அம்மா தன் மனதில் சுமக்கிறார்...
தன் மகள் பெற்றெடுத்தவுடன் தான் அம்மா பெருமூச்சுவிடுகிறார்...
பேரனோ...பேத்தியோ பார்த்து பார்த்து பூரிப்பு அடைகிறார்.
பையனா அம்மாவுக்கு ஒர் தனி பிரியம் தான்...
தனியா பிடிச்சதை செய்து கொண்டு தருவதென்ன....அட அடா
சாப்பிடலணா மட்டுமே செல்லமாய் கோபம் வேற....
அப்பாவிற்கு ஓய்வுண்டு....ஆனால் அம்மாவிற்கு இல்லை....
இடைஇடையே உணவகத்தில் உணவு அருந்தும் போது மட்டும் சிறிய
இடைவேளை...அவ்வளவு தான்...
அம்மா என்றால் அன்பு..
அதை உண்ர்ந்தால் பண்பு...
இதையே இத்திரியில் நம்பு...
அம்மாவின் பாசத்தில் திளைத்திருப்போம்
என்றென்ன்றும் மகிழ்ச்சியோடு வாழுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
hai really super pa.....
ReplyDeletefeel the fell........!!!!!!!!
//அம்மா அடுப்படியில் தன் வாழ்நாளில் முக்கால் வாசி வாழ்கிறார்...
ReplyDeleteஆனாலும் அம்மாவை போல் அதிபுத்திசாலி உலகிலில்லை.//
ஆரம்பமே அமர்க்களமா இருக்கே சரண்யா...
//யார் யாருக்கு எது எது பிடிக்கும் என்று தெரிந்து இருப்பது அம்மாவின்
சமையல் சாம்ராஜ்ஜியத்தின் ரகசியம்....//
இது நிஜம்... நம் மனதின் ஓட்டத்தை நன்கு அறிவார்...
//பார்த்து பார்த்து சமைத்து கொண்டிருப்பவர் தான் ஆனால் சீப்பு
காணாமல் போனால் கூட கேட்டால் சரியான இடத்தை சுட்டி
காமிப்பார் அம்மா...//
ஹா...ஹா... பலே.. சமையல்ல பிசியா இருந்தவங்கள சீப்பு எங்கேன்னு கேட்டு தொந்தரவு பண்ணி இருக்கீங்க... இல்லையா சரண்யா??
//அம்மா ஓர் களஞ்சியம்...
நல்லவிதையை மனதில் விதைப்பவர்....
பழக்கத்தை சொல்லி கொடுப்பவர்....
(யாராவது விருந்தாளி வந்தால் .....வாங்க ன்னு கூப்பிட்டாயா? என்று ஒரு முறை கேட்டும் தெரிந்து கொள்வார்)//
நல்லா க்ளோஸா அப்செர்வ் பண்ணி இருக்கீங்க...
//கவனத்தோடு கையாளுபவர்....
பார்த்து பார்த்து செய்பவர்...
அம்மாவும் அப்பாவிடம் தான் தன் கோபத்தை காட்டுபவர்....//
அது செல்ல ஊடல்...
//செல்லமாய் வளர்த்து
பெண்ணை திருமணம் செய்து வைத்து
அவள் ஓர் அம்மாவாக போது
அம்மா தன் மனதில் சுமக்கிறார்...//
ஆ...ஹா.. இது நல்லா இருக்கே...
//தன் மகள் பெற்றெடுத்தவுடன் தான் அம்மா பெருமூச்சுவிடுகிறார்...
பேரனோ...பேத்தியோ பார்த்து பார்த்து பூரிப்பு அடைகிறார்.//
அதுதான் அவர்களின் வாழ்நாளின் மிகப்பெரிய சந்தோஷம்... இதை நானும் கண்கூடாக கண்டிருக்கிறேன்..
//அம்மா என்றால் அன்பு..
அதை உண்ர்ந்தால் பண்பு...
இதையே இத்திரியில் நம்பு...//
இது அதிரடி... அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே. நேரில் நின்று பேசும் தெய்வம் அவள்... அவளின் பாதம் பணிவோம்... தாய்மையை போற்றுவோம்...
தூள் கிளப்பி விட்டீர்கள் சரண்யா... அப்பா, இப்போ அம்மா, அடுத்து யாரோ??
நன்றி arun
ReplyDeleteநன்றிகள் கோபி அவ்ர்களே...
/அப்பா, இப்போ அம்மா, அடுத்து யாரோ??/தெரியுல....
பிழை ஒன்றும் இல்லையென்பதில் சந்தோஷம்.