கடைசியில் முடியும் வார்த்தையோ வரியில் நாம் தொடர வேண்டும்...அப்படி விளையாடிய போது எழுதியதில் சில...
அருள்வரும் என்றே
பொருள் தேடி சென்று
அவ்வருள் பொருளுக்கு
அப்பாற்பட்டது என்றெ
உணர்ந்து.... துறந்து ....
மெய் எது என்றால்
மேன்மை தரும் இறைமையன்றோ
நீயே தானுரைப்பாய்
நான் அது செய்தேன்
இது செய்தேன் என்பாய்
அன்று அன்போடு செய்தாய்
இன்று செய்ததை நீயே
என்றும் சொல்லி காமிப்பது முறையோ....
இல்லையென்றால் என் செய்வேன்
கடைசி நாளான இன்றாவது கட்டுவேன்
தேர்வுக்கு பணம் என்று எண்ணிணேன்
ஆனால் நாளையென்றால் நிற்பேன்
வெளியில் என்றெப்படி உரைப்பேன்
உங்களுக்கு மனம் நெகிழ்ந்தேன்
என்றாலும் வேண்டுமென்றேன்
இன்றே அளிக்க கூறினேன்
விழிநீரால் வேண்டுதல்செய்கிறேன்
துன்பத்தில் துவண்ட போது நான்
இறைவா,கடவுளே எங்கே நீ
உதவி செய்வார் எப்படியும் அவர்
ஆனால் நன்றி சொல்ல மட்டும் நீங்கள்
மறப்பதேனோ பேரருளை பெற்றவர் தம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாம்
ஒரு நாள் பேரின்பத்தை அடைவோம்
என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்
சரண்யா...
ReplyDeleteதங்களின் ஆதியந்த சவால் மிக நன்றாக உள்ளது..
நான் போட்டிக்கெல்லாம் வரல... ஜஸ்ட், படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்ல மட்டும்தான் வந்தேன்...
வந்தேன், படித்தேன்...இதோ உங்களை வாழ்த்துகிறேன்...
எழுதிய நான்கு விஷயங்களும் நான்கு வெவ்வேறு விஷயங்களை பற்றி என்றாலும், அவை அனைத்தும் மிக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது...
வாழ்த்துக்கள் சரண்யா...
நன்றிகள் திரு கோபி அவர்களே....
ReplyDeleteதொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கு...
நான் எந்த சமயத்தில் எழுதினேன் என்று தான் குறிப்பிட்டு இருந்தேன்...தங்களிடம் சவால் போட முடியுமா...அப்படி எல்லாம் இல்லை...