கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே பகிர்ந்துள்ளேன்.
சமத்துவமும் சமாதானமும்
சாலையோர சண்டையை
சமாளிக்கும் வரைத்தான்
வெறும் பேச்சில் மட்டுமே
வெள்ளை புறா வருகி்றதே
தண்ணீர் தாகத்தை என்று
தான் தீர்ப்பாயோ இறைவா...
வியர்வையால் மட்டும்
உணரக்கூடிய உழைப்பு
ஊரிலே மின்சாரத்துண்டிப்பு
என்பதாலும் என்று உணர்வாயா?
சுதந்ததிரம் கிடைத்தது ஆனா
சுகமாக வாழ்வது எப்பொழுது?
சீரமைப்பு பணி என்று சொல்லி
சொல்லியே ஏமாற்றுவது ஏனோ....
.
என் மனதில் என்றென்றும் நீ!!!
வாழ்வாய் ஆபத்தில் உதவினாய்
வாழ்வு தனை மீட்டு கொடுத்தாய்
என்னவென்று சொல்லுவது உமக்கு
"நன்றி" என்ற மூன்றெழுத்தை மட்டுமா?
//சமத்துவமும் சமாதானமும்
ReplyDeleteசாலையோர சண்டையை
சமாளிக்கும் வரைத்தான்
வெறும் பேச்சில் மட்டுமே
வெள்ளை புறா வருகி்றதே
தண்ணீர் தாகத்தை என்று
தான் தீர்ப்பாயோ இறைவா...//
சூப்பர்.... மிக மிக உயர்வான சிந்தனை... மழை வேண்டி பிரார்த்திப்போம்... வரும் மழையை சேமிப்போம்...
//வியர்வையால் மட்டும்
உணரக்கூடிய உழைப்பு
ஊரிலே மின்சாரத்துண்டிப்பு
என்பதாலும் என்று உணர்வாயா?
சுதந்ததிரம் கிடைத்தது ஆனா
சுகமாக வாழ்வது எப்பொழுது?
சீரமைப்பு பணி என்று சொல்லி
சொல்லியே ஏமாற்றுவது ஏனோ....//
லோக்கல் ஈ.பி.ல படிச்சுட்டு கரெண்ட் கட் பண்ணிட போறாங்க...
//என் மனதில் என்றென்றும் நீ!!!
வாழ்வாய் ஆபத்தில் உதவினாய்
வாழ்வு தனை மீட்டு கொடுத்தாய்
என்னவென்று சொல்லுவது உமக்கு
"நன்றி" என்ற மூன்றெழுத்தை மட்டுமா? //
மனது மூன்றெழுத்து
வாழ்வு மூன்றெழுத்து
மீட்பு மூன்றெழுத்து
என்ன மூன்றெழுத்து
நன்றி மூன்றெழுத்து
பதிவு மூன்றெழுத்து
நன்று மூன்றெழுத்து....