நாக்கு
உன் வேலை சுவைப்பது தானே?
சொல் ஏன் இப்படி செய்கிறாய்?
சுவைப்பதோடில்லாமல்
வன்மைச்சொல் பேச வைப்பதேன்?
இதைத் தான் வள்ளுவன்
உள்ளாறும் ஆறாதே என்று சொன்னாரோ?
அந்தோ! கடவுள் உனக்கு
பற்களை வேலியாக வைத்தும் இப்படியோ?
அறுசுவையை உணர வைக்கும் நீ
ஆட்டிப்படைப்பது நான்
என்றும் பிறழாமல்
பேச வைத்தால்
நான் வாழ்வேன்
மனதில்....
//நாக்கு
ReplyDeleteஉன் வேலை சுவைப்பது தானே?
சொல் ஏன் இப்படி செய்கிறாய்?
சுவைப்பதோடில்லாமல்
வன்மைச்சொல் பேச வைப்பதேன்?//
நல்லா கேளுங்க சரண்யா... நானே கேட்கணும்னு நெனச்சேன்...
நாக்கில் நரம்பில்லாமல் பேசினால், கேட்பவர் மனது என்ன புண்படும்?? தொடக்கமே அமர்க்களமுங்கோ...
//இதைத் தான் வள்ளுவன்
உள்ளாறும் ஆறாதே என்று சொன்னாரோ?
அந்தோ! கடவுள் உனக்கு
பற்களை வேலியாக வைத்தும் இப்படியோ?//
ஆமாங்கோ... இதை தான் வள்ளுவர் : "தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்று சொன்னாருங்கோ...
//அறுசுவையை உணர வைக்கும் நீ
ஆட்டிப்படைப்பது நான்
என்றும் பிறழாமல்
பேச வைத்தால்
நான் வாழ்வேன்
மனதில்....//
இங்க என்ன சொல்ல வர்றீங்க... கொஞ்சம் எனக்காக விளக்க முடியுமா சரண்யா?
திரு கோபி அவர்களே....
ReplyDeleteஇன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு என...பிறழாமல் பேசினால் நான் மனதில் உயர்ந்து தானே வாழ்வேன்...அதை தான் சொல்லியுள்ளேன்...
உண்மையில் புரியவில்லையா?!?!
//உண்மையில் புரியவில்லையா?!?!//
ReplyDeleteஇப்போ புரிஞ்சுடுத்து சரண்யா..
விபரமாக சொல்லி விளங்க வைத்ததற்கு என் நன்றி...
ஒ ஒ...சரி
ReplyDelete