
இல்லத்தின் இருளை அகற்ற
ஒளியாய் நின்றாய் நீ
உலகத்தின் இருளை அகற்ற
சூரியனாய் திகழ்கிறாய் நீ
மனதின் இருளை அகற்ற
அறிவொளியாய் நுழைந்தாய் நீ
இறைவா.....
தீபஒளியாய் பிரகாசிக்க
பயமுறுத்தும் பட்டாசுகளா
சில மணித்துளிகள் தானே
துடிப்புடன் விளங்குவாயே
பின்பு மறைந்து விடுவாயே
மறைந்து விளையாடுவதே
உன்னுடைய லீலையாகுமே
பட்டாசுகள் பளிச்சிடும்
ஆனால் சத்தம் பயமுறுத்துமே
காதுகள் அடைக்குமே
கம்பி மத்தாப்பு தெரிக்குமே
சாட்டை கீழ் நோக்கி இருக்குமே
சங்கு சக்கரம் சுழன்று கொண்டே
புஸ்வோணம் வானம் நோக்கியே
கலர் தீப்பெட்டி வண்ணமயமாய்
பாம்பு மாத்திரை நெளிந்து வளைந்தே
இப்படியே சென்றால்....
சரி இனிப்பாய் வந்தால்
சர்க்கரை நோய் உள்ளவர்
சீண்ட மனமில்லையே
ஆகையால் இறைவா
எல்லாரும் மகிழ்வாய்
ஒளி மயமாய் நீ
தீபஒளி திருநாளிலும்
ஜோதினுள் புகுந்து
வழியாய் வந்து
வாழ்வில் சிறக்க
வைப்பாய் என்றும்......
அனைவருக்கும் தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்
தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... சரண்யா...
ReplyDelete