"ங்க".....குழந்தை கத்தும் போது...தோன்றியது..பின்னாளில் இந்த"ங்க" எங்கே போகிவிடுகிறது...என்ற எண்ணத்தில் எழுதியது..
"ங்க"...
பிறந்த குழந்தை
அழகாய் "ங்க"
கேட்கவே அழகாய்
ஒரு மொழி
வளர்ந்தவுடன்
ஏன் வா,போ
என்றே வரும்
வார்த்தைகள்
எங்கே போயிற்று
வா"ங்க",போ"ங்க"
யாரின் குற்றம்
பாசத்தால்
சொல்லிக் கொடுக்க
மறுத்ததா மனம்...
எதனால்...
என்றுமே "ங்க"
ஓர் தனி தான்
மரியாதையில்...
"ங்க"மறக்காமல்
மீண்டும்..
கொடுப்போம்
"ங்க"வளர்ந்தும்
வாழ்விலும்
மனதிலும்...
நிலைத்திருகட்டும்
நாம் சென்றாலும்...
ஏ"ங்க"
ReplyDeleteஇந்த பதிவு"ங்க"
நீ"ங்க"
நல்லா"ங்க"
எழுதி"ங்க"
இருக்கீ"ங்க"
வாழ்த்துக்கள்"ங்க"...
சரிதான் சரண்யா... பெற்றோரும், உடன் இருப்போரும் சொல்லி கொடுப்பதால் தான், அவர்கள் பின்னாளில் "ங்க" என்று அழைக்க வேண்டும் என்பதையே மறந்து விடுகிறார்கள்...
தீபாவளி செலெப்ரேஷன் எப்படி இருந்ததுன்னு ஒரு பதிவு எழுதுங்களேன் சரண்யா...
அப்படியா....
ReplyDeleteதீபாவளி asusual தான் ....