கவிதை எழுத ஆரம்பித்து சில நாட்களில் தமிழ் மன்றத்தில்
கவிதை விளையாட்டில் கொடுத்த தலைப்பில்
சில நிமிடத்தில் உதித்ததை
இங்கே பகிர்ந்துள்ளேன்.
என்றும் நீ எனக்கு
குழந்தை தான்...
என்னை அம்மா என்று
உயர்ந்த தாய்மைக்கு
எட்டி செல்ல வைத்தாயே!
நீ அம்மாவானாலும்
எனக்கு நீ குழந்தை தானே
என்னை வந்து பாராயோ?
ஏக்கத்துடன் ஓரு தாய்......
தன் நலன் காக்க தவறினாள்
தாயாக அவள் துடித்தாள்
திசைகளெல்லாம் நோக்கி கதறினாள்
தீமை ஒன்றும் நினைகாதவள்
துச்சம் என மதித்தால் தாங்கமாட்டாள்
தூக்கத்தையும் மறந்து விழித்திருப்பாள்
தென்னம்பிள்ளை நட்டு வைத்தவள்
தேரோடுவதை பார்க்காமல் இருந்தாள்
தைத்த சட்டை அணிந்து பார்த்தவள்
தொட்டில் கட்டி பெயர் சூடியவள்
தோடு போட்டு அழகு பார்த்தவள்
தௌகித்திரன் வரவை எதிர்பார்கிறாள்
நல்லா எழுதி இருக்கீங்க சரண்யா...
ReplyDeleteஉங்களிடம் தமிழ் விளையாடுகிறது....
வாழ்த்துக்கள்...