Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Monday, October 19, 2009

ஆதியந்தக் கவிதை - சவாலுக்குத் தயாரா?[4]

இந்த போட்டியில் உதித்த சில எண்ணங்களின் யதார்த்தம்

ஒளியும் தருவார்...ஆசிரியர்
அறிவொளியும் தருவார்
அதை ஓலியிலும் கேட்பார்
இதை தெரிவிக்கவும் செய்வார்
இணையதளத்தில் அவர்
இடுக்கைகள் பல தொடர்வார்
இணையாக மறுமொழியிடவே

நல்லொழக்கத்தால் உம்மை
நாடெங்கும் பாராட்டுவதை
பார்த்து ரசிக்கும் மனமே
பரவசத்துடன் உயர்வதை
பண்படுவதை வேண்டுதே

மறைக்கிறாள்...கஷ்டத்தில்
தவிப்பதை...வாழ்கிறாள்
மறைத்தே...உள்ளத்தில்
என்றுமே...உயர்ந்தாள்

மீண்டும் இவ்வுலகில்
பிறக்க வேண்டாமென
ஆண்டவனை கேட்டு
கொண்டிருக்கும் ஞானி
உணர்ந்தார் பிறவாமை
நிலையை சமாதியில்
அமர்ந்தார் உயிரோடு
அது தான் ஜீவசமாதியோ...

1 comment:

  1. //நல்லொழக்கத்தால் உம்மை
    நாடெங்கும் பாராட்டுவதை
    பார்த்து ரசிக்கும் மனமே
    பரவசத்துடன் உயர்வதை
    பண்படுவதை வேண்டுதே//

    ச‌ர‌ண்யா... இது ரொம்ப‌ நல்லா இருக்கு...

    //மறைக்கிறாள்...கஷ்டத்தில்
    தவிப்பதை...வாழ்கிறாள்
    மறைத்தே...உள்ளத்தில்
    என்றுமே...உயர்ந்தாள்//

    சேர்ந்தே இருப்ப‌து ஏழ்மையும், வ‌றுமையும் அல்ல‌வா... நெகிழ்வாக‌ ப‌திவு செய்துள்ளீர்க‌ள்...

    //மீண்டும் இவ்வுலகில்
    பிறக்க வேண்டாமென
    ஆண்டவனை கேட்டு
    கொண்டிருக்கும் ஞானி
    உணர்ந்தார் பிறவாமை
    நிலையை சமாதியில்
    அமர்ந்தார் உயிரோடு
    அது தான் ஜீவசமாதியோ... //

    பிற‌வாமை வேண்டுவ‌தை அழ‌காக‌ சொல்லி இருக்கிறீர்க‌ள்...

    ச‌வாலுக்கு எல்லாம் வ‌ர‌ முடியாத‌ அள‌வு எழுதி இருக்கீங்க‌...

    ஏதோ ந‌ம்மால‌ முடிஞ்ச‌து, வந்து ப‌டிச்சுட்டு போக‌லாம், அவ்ளோதான்.. போட்டி எல்லாம் போட‌ முடியாது..

    வாழ்த்துக்க‌ள் ச‌ர‌ண்யா. நிறைய‌ எழுதுங்க‌...

    ReplyDelete