ஐம்புலன்கள் பற்றி நேற்று நான் எழுதியது....
கண்
உலகத்தையே பார்க்க வைக்கிறாய்
உள்ளத்தை மட்டும் பார்க்க மறுக்கிறாயே
அதனால் தான் நீதி தேவதை உன்னை
உதறித்தள்ளியதன் நோக்கமோ....
ஆனாலும் உன்னை தானம் செய்தால்
உள்ளத்தை அறிய முடியும் எனத்
தெரிந்தால் அவள் கண்களிலும்
நீராய் நீயே உணர்வாயிருப்பாயோ....
பார்க்க தான் உதவி செய்வாய் கண்ணே
என்றாலும் பேசவும் செய்வாய் தானே
நவரசத்தையும் உன்னில் காணுவது
இறைமையின் மகிமையன்றோ....
உன்னை புரிய எத்துணை அறிவிருந்தும்
என்னை நீ ஆட்கொண்டு
பார்க்கிறாய்...
அழுகிறாய்.....
பேசுகிறாய்.....மௌனமாக ஓர் மொழியில்
வெளிக்காட்டுகிறாய்....என் கோபத்தையும்
ஆவலையும்......
கவனிப்பையும்....
கண்காணிப்பதும் என நீ என்றும் என்னுள்
சில நேரம் மட்டும் உன்னை மூடியும் கடவுள்
தெரிவாரோ...... தியானத்தில்....அமைதியில்....
எனினும் நல்லனவற்றையே பார்க்க வைப்பதில்
நீ வாழ்க... வளர்க....வயதானாலும் வழிமாறாமல்
எம்மோட பாதையை காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்
வாழும் ஜீவன்.
தொடரும்....
//உலகத்தையே பார்க்க வைக்கிறாய்
ReplyDeleteஉள்ளத்தை மட்டும் பார்க்க மறுக்கிறாயே
அதனால் தான் நீதி தேவதை உன்னை
உதறித்தள்ளியதன் நோக்கமோ....//
அட...ஆமாம்... நீதி தேவதை கண்ணை கட்டியிருப்பாங்க இல்ல... நல்லா எழுதி இருக்கீங்க சரண்யா...
//ஆனாலும் உன்னை தானம் செய்தால்
உள்ளத்தை அறிய முடியும் எனத்
தெரிந்தால் அவள் கண்களிலும்
நீராய் நீயே உணர்வாயிருப்பாயோ....//
இருக்கலாம்.... இருத்தல் நலம்...
//பார்க்க தான் உதவி செய்வாய் கண்ணே
என்றாலும் பேசவும் செய்வாய் தானே
நவரசத்தையும் உன்னில் காணுவது
இறைமையின் மகிமையன்றோ....//
சரி... கண்ணால் காதல் கவிதை சொல்ல முடியுமே...
//உன்னை புரிய எத்துணை அறிவிருந்தும்
என்னை நீ ஆட்கொண்டு
பார்க்கிறாய்...
அழுகிறாய்.....
பேசுகிறாய்.....மௌனமாக ஓர் மொழியில்
வெளிக்காட்டுகிறாய்....என் கோபத்தையும்
ஆவலையும்......
கவனிப்பையும்....
கண்காணிப்பதும் என நீ என்றும் என்னுள்//
நல்லா விரிவா அலசி எழுதி இருக்கீங்க சரண்யா...
//சில நேரம் மட்டும் உன்னை மூடியும் கடவுள்
தெரிவாரோ...... தியானத்தில்....அமைதியில்....
எனினும் நல்லனவற்றையே பார்க்க வைப்பதில்
நீ வாழ்க... வளர்க....வயதானாலும் வழிமாறாமல்
எம்மோட பாதையை காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்
வாழும் ஜீவன்.
தொடரும்....//
பிரமாதம்... வேறு ஏதாவது வார்த்தை இருந்தாலும் சேர்த்து கொள்ளவும்... அவ்ளோ நல்லா இருக்கு சரண்யா... வாழ்த்துக்கள்...
நன்றிகள் திரு கோபி அவர்களே....
ReplyDeleteநவரசத்தையும்.....என்று சொல்லி விட்டேனே....