சின்ன வரியில் பிரதிபலிக்கும் எண்ணத்தை விளையாட்டில் வெளிவந்தவை....
வார்த்தை கொடுக்க பட்டதில் தோன்றியதை எழுதலாம்....
ஜீவனுள் வாழும் இறைமை...இறைமை அன்பிலே வாழும்
வாழ்வு..
புத்தி மனதை வெல்வது புத்திசாலியாம்
மனம் புத்தியை வெல்வது கோபத்திலாம்
மகிழ்ச்சி ஓர் மாயை
கண் ஓர் சுற்றத்தின் பிரதிபலிப்பு
குற்றம் பார்ப்பதற்கு முன்
குற்றமற்றவராய் இருப்பது நல்லறம்
தன் வாழ்நாளில் அன்னதானம் செய்வதால் சிறக்கும்
வலி தாங்கி்யது தான் வறுமை
உழைத்து தானே அப்பா உயர்ந்த இடத்தில் உயர வைக்கிறார்
பொடி நடையாய் நடந்து நடந்து கால்கள்
கேட்கிறதாம் என்று முடியும் உந்தன் தேடல்.
போதும் என்ற எல்லையில்லை கல்விக்கற்க
சொல் வன்மைக்கு நாக்கு தானே காரணம்
சொல் பிறர் கவனிக்க சொல்
சிறப்பு என்பது மனத்ருப்தியின் முழுமை
நிட்சயம்...வெல்வாய் நம்பிக்கையோடு இரு
//பழமொழி, புது மொழி இது நம் மொழி //
ReplyDeleteசரண்யா... எதை பாராட்டுவது என்றே தெரியவில்லை...
தங்கள் எல்லா சிந்தனை எழுத்தும் எனக்கு பிடித்திருக்கிறது... குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்...
//பொடி நடையாய் நடந்து நடந்து கால்கள்
கேட்கிறதாம் என்று முடியும் உந்தன் தேடல்.
போதும் என்ற எல்லையில்லை கல்விக்கற்க
சொல் வன்மைக்கு நாக்கு தானே காரணம்
சொல் பிறர் கவனிக்க சொல்
நிட்சயம்...வெல்வாய் நம்பிக்கையோடு இரு //
அது நிச்சயம் என்று இருக்கலாமோ சரண்யா??
வாழ்த்துக்கள்... வர வர கலக்கிட்டி வர்றீங்க... ம்ம்... நடத்துங்க...