இந்த புத்தகமும் அருமையானது... ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி உள்ளதை வைத்து புரிய புதுமையாக ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள உதவுகிறது! நான்காம் பகுதியை பார்ப்போம் வாங்க!
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன வாக்கியம் தான் இது! எவ்வளவு நல்லது ... அப்பப்போ அந்த குழந்தை தன்மையோடு இருந்தாலே ஆனந்தம் தானே! ஏனென்றால் குழந்தைக்கு வெறுப்பு என்பது இருக்காது...வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அந்த அந்த நேரத்தை கையாளும் பாங்கு அவர்கள் போல யாருமில்லையே!😊👍
ஒரு சின்ன பையனுக்கு ஏற்பட்ட தவறான புரிதலில் ஒரு நல்ல ஆசியரை இழந்தோம், இதற்கு காரணம் ஒவ்வொருவரிடம் உள்ள நன்மையான விஷயத்தை நாம் பிள்ளைகளுக்கு சொல்லாதது தான் என சொல்வேன்...எல்லா விஷயத்திலும் + - இருக்கும்..ஆனால் எதனால் படிக்க சொல்கிறார்கள் யாருக்கு நன்மை என்பதை புரிந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது. இனிமேலும் இது நடக்காமல் இருப்பது நம் கையில் தான் உள்ளது....சரியாக வழிக்காட்டுவோம் சிறுவர்களுக்கு...தவறை மன்னிப்போம் அப்போது அவர்கள் மற்றவரின் தவறை மன்னிப்பார்கள்...🙏👍
பாசி போன்றது வெறுப்பு.. தரையில் பாசி இருந்தால் அதனை சுத்தமாக்குவது தான் நாம் நடக்க வழி சுமுகமாகும் இல்லையென்றால் ப்ரச்சனை (வழுக்கிவிட்டால்) தான்! மனதை இது போல வெறுப்பு என்னும் பெருநெருப்பு இல்லாதவாறு வைத்து கொண்டால் நல்லது. இல்லையென்றால் வெறுப்பால் பகை வளரும் அதனால் நமக்கு நிச்சயம் நிம்மதி வரணும் என்றால் வெறுப்பு என்னும் மகத்தான பாசியை அகற்றுவோம்!😊👌👍