இந்த புத்தகம் படிக்க இன்னைக்கு தொடங்குகிறோம்.... வாங்க!பார்ப்போம்...எழுத்தாளர்பாரதி பாஸ்கர் அவர்கள் என்றாலும் மேடையில் பேசுவது போல உணர முடிகிறது
அவரின் வரிகளில்....🤝😊
முதலிலே புத்தகத் தலைப்பு தான் தலைப்பு... சிறகை விரி ! பற என்று சொன்னால் எவ்வளவு அழகாய் இருக்கும் ...யோசித்தாலே அருமை...மனக்கண்ணில் பறக்க தோன்றுகிறது...நம்மை சுற்றியிருப்பவர் அனைவருமே நமக்கு குரு தான்....என்று கூறிய ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமி பற்றி அறிய முடிந்தது...அருமையான வரிகள் ஒவ்வொருவரும் நமக்கு ஏதோ சொல்லி கொடுத்து கொண்டே இருக்கிறார்கள்...😊👍
படைத்தல் - ப்ரம்மா, காத்தல் - விஷ்ணு, அழித்தல் - சிவன் என்ற இம்மூவரும் ஒன்று சேர்ந்த அவதாரம் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமி...🙏
https://www.vikatan.com/spiritual/temples/93103-history-of-gnanaguru-dattatreya-and-hows-got-24-teachers
Click here
மூவரும் சேர்ந்தவர் ஞானகுருவிற்கு
24 குருமார்கள்
யார் யார் என அறிய முடிகிறது...
மன வலிமை,மன அமைதி உண்டாக,
தீவினை அகல ஸ்ரீ தத்தாத்ரேயர் சுவாமியை வணங்குவர்🙏
https://tamil.boldsky.com/insync/pulse/dattatreya-jayanti-2020-date-significance-timings-028342.html
Click here
நான் தேடிய அதிக தகவலில் இந்த குழந்தை வரமும்,வரலாறு,
கதை என அறிய முடிந்தது...மேலே அதிக தகவலுக்காக நீங்களும் இதில் சென்று அறிய இங்கே கொடுத்துள்ளேன்...🙏
தேநீர் குடுவையில் ஏற்கனவே நிரம்பி இருந்தால் மேல் அதிகமாக ஊற்ற இயலாதது போல...எந்த கருத்தும் உள்ளே செல்லாது நம் மனம் நிரம்பி வழிந்தால்...முடிந்த வரை அப்பப்போ சுத்தம் செய்து அதிக அதிக பாடங்களை கற்போம்!
வாழ்வில் முன்னேறி செல்வோம்!
நமக்கு நம்மை சுற்றிருக்கும் குரு எல்லாம் என்ன சொல்கிறார் என கேட்க தயாராகுவோம்! நன்றி🙏😊
- தொடர்ந்து தெரிந்து கொள்வோம்...
No comments:
Post a Comment