Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, June 13, 2020

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் (Chapter 1)


இந்த புத்தகம் தான் படிக்க ஆரம்பிக்கிறோம்...
தலைப்பே அசத்தல் இல்ல...
இன்றைய காலக்கட்டத்தில நிச்சயம் 
தெரிந்து கொள்ள வேண்டிய யுக்திகள்....

நான் பல முறை வியந்ததுண்டு எனக்கு தெரிந்து என் அப்பா அம்மா எங்கள் முன்னாடி கோபமாகவோ...அதிர்ந்தோ பேசியதில்லை...

விவரம் தெரிந்தவுடன் எப்படி இது சாத்தியம் என்று உணரும் போது...நாங்கள் கோவிலுக்கு செல்லும் போதோ அல்லது வேறு எங்காவது போகும் போது அவர்கள் தங்களுக்குள் பேசி முடிவு செய்கிறார்கள்..

அதுவே தான் ஓர் வாழ்வியலாக மாறி போனது..
பசங்க முன்னாடி சண்டை போடாமல் தவிர்ப்பது,பசங்களை நடுவர் ஆக்கிவிட கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது புரிந்தது...

அப்படி செய்வதால் இருவர் மீதும் குழந்தைக்கு மதிப்பும் மரியாதையையும் இருக்கிறது...

தந்தை தான் ...தாய் தான் என தேர்வு செய்யாமல் இருவரும் என்றே தேர்வு செய்வர்...

குடும்ப சூழலும் அமைதியாகவும் ஆனந்தமாக இருக்கும்... எல்லாம் பசங்க தெரிந்து கொள்ள வேண்டும் என நாம் செய்யும் சின்ன தவறில் இதுவும் ஒன்று...

மாற்றிக் கொள்வோம்...
நிம்மதி.... வீட்டில் இருந்தால் 
வேலையில்...... பளு இருந்தாலும் தெரியாது...
அந்த ஒரு நல்ல சூழலை உருவாக்குவோம்...

👍👌




அருமை மரம் பூத்து குலுங்கும் நம் வாழ்வியலும் மகிழ்ச்சி என்பது பூத்து குலுங்கும்....

அதில் கோடரி நம்முள் வரும்
கோபத்திற்கு ஒப்புமை...

கோபம் வந்து நம் வாழ்வில் 
வசந்தத்தை விலகி செல்ல காரணமாக.....
அதனை காப்பாற்றிக் கொள்ள நாம் 

இந்த புத்தகம் 
தலைப்பு போல் CONTROL கோபம் 
என்பதை நினைவில் கொள்வோம்...


கோபம் என்கிற கோடரியால்
 மரம் போல் நன்மையளிக்கும் 
நம் வாழ்க்கையை 
வெட்டி சாய்க்க முற்படலாமா?!😱🤔



முறிந்த பின்பு நிதர்சனமான அமைதி நிலவும் ஆனால் நாமே நம் வாழ்கை அழிவு பாதையில் சென்றுக்கொண்டிருப்பதை  அறியாமல் இருக்கிறோம்..மழை என்கிறதை வரவிடாமல் தடுப்பது போல் சந்தோஷம் என்கிற ஆனந்த  மழையை நம் வாழ்வில் வரவிடாமல் இந்த கோபத்தால் நாம் இழக்கிறோம்...🌨️☁️





வரண்டது போல இந்த படத்தை 
நாம் பார்க்கவே 
மனம் பதைக்கிறது ...

நாம் எவ்வளவு முறை 
இது போல் கோபம் பட்டிருப்போம் 
என நினைத்து பார்த்தாலும் மனம் பதைக்கும்...
கோபத்தால் எவ்வளவு அழிவு ...
ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்...😊🤪

மேலும் கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு நாமே நமக்கு கொடுத்துக்கொள்ளும் தண்டனை தான்!பிறர் செய்வதற்கு நாம் காரணமாகாமல் இருக்கலாம்...நல்வழியில் சொல்லி திருத்த முற்ப்படலாம்...

அதுவும் இல்லை என்றால் அமைதி காக்கலாமே!

கோபத்தை தவிர்ப்போம்!


 மரமும்,கோடரியும் என்ற 

இரண்டே வார்த்தையில்

 எழுத்தாளரின் மிக பெரிய ஓர் நுட்பமாக 

 கோபத்தால் நாம் இழப்பது சந்தோஷம் 

என நான் புரிந்து கொண்ட விதத்தை 

இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி....


மிக்க நன்றி...அன்பு நல்வாழ்த்துக்கள்...சுபதினம்...




No comments:

Post a Comment