மூன்றாவது Chapter பார்ப்போமா...அருமை..கஷ்டம் என்று புலம்புவதை விட்டுட்டு இஷ்டப்பட்டு அந்த வேலை செய்தால் நமக்கு மனநிறைவு கிடைக்கும்.....
நடிகர் சூர்யா பட dialogue (ஒரு மேடையில் பேசுவார்) தான் ஞாபகம் வந்தது....கஷ்டப்பட்டு நாம் வேலை செய்யறது விட்டுட்டு நாம் இஷ்டப்பட்டு வேலை செய்தால் நிச்சயம் நமக்கு வெற்றி தான் ...
அலசி ஆராய்ந்ததில் கிடைத்த தகவல்....உண்மையில் ....
மனசு சொல்வதை மூளை ஏற்றுக்கொண்டு கை வழியாக செய்தால் மட்டுமே வெற்றி அடைய அதிகமான வாய்ப்பு..அதில் இரண்டை மட்டுமே பயன்படுத்தினால் ...நினைத்தேன் ஆனால் இன்னும் செய்ய ஆரம்பிக்கவில்லை என்றாலும் வெற்றி கிடைக்காது...👆👍
அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது....
சுமுகமான வேலை(Easy work) என்றால்
தன்னை காத்து கொள்ள பொய் சொல்வது...
ஏமாற்றுவது...பழிப்போடுவது...
ஓயாமல் புகார் செய்வதில் முடியும்...
கஷ்டப்பட்ட வேலை(Hard Work) என்றால்
கற்றுக்கொள்வது... உதவி செய்வது...
உன்னத எண்ணங்களால் தூண்டுதல் அடைவதாக அமையும்....
அதுவே சாமர்தியாமான வேலைசெய்தால் (Smart Work)
இலக்கு நோக்கிய பயணமாக ஒவ்வொரு
முயற்சியையும் முக்கியமாக கருதப்படும்...
எல்லாவற்றையும் விட இந்த விவேகமான வேலை (Prudent Work) என்பது தான் கொஞ்சம் கஷ்டம் கொஞ்சம் புத்திசாலித்தனம் என்ற இரண்டையும் பயன்படுத்தி வெற்றி இலக்கை அடைவது என்பதாம்...
நான்காவது விவேகம் எல்லா விஷயங்களிலும்
நமக்கு தேவையான ஒன்றாக நாம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றியோடு மனநிறைவும் நாம் அடைய
வழிவகுக்கும் என்று நினைக்கிறேன்..நன்றி.👍😊
இது வரை Smart work என்பது தான் சிறந்தது என நினைத்திருந்தேன்...
Prudent work என்பது இன்னும் அடுத்த படி என்பதை அறிவதற்கு
இந்த Chapter 3 அன்றைய தேடலில் பல தகவல் அறிய இந்த புத்தகம்
ஒரு வழிகோலாக விளங்கியது....
இதனை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி
அனைவருக்கும் நன்றி....👍😊🙏
- தொடர்ந்த வாசிப்போம்
No comments:
Post a Comment