இந்த புத்தகம் நேரமில்லை நினைக்கிற நிறைய பேருக்கு உதவும் விதமாக உள்ளது....நிறைய யோசிக்க வைத்த புத்தகம்...அருமை....
ஆம் எழுத்தாளர் சொல்வது அதனை அப்பப்போ யோசித்து அசைப்போட்டுக்கொண்டிருந்தால் நிச்சயம் இந்த ஐந்து நிமிடம் வாழ்வின்
முக்கிய நிமிடங்களாக தோன்றும்.
அருமையான சிந்தனை..முதலிலே தடலடி போல உள்ளது...யாரிடமும் எதிர்பார்ப்பு இல்லாமல் தன்னலம் கருதாது பழுகுவதே சிறப்பு...👍
இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம்....வாழ்க்கை சரியாக இருப்பது மட்டுமல்ல நிம்மதியும் கூட இருக்கும்....மற்றவரின் நன்மையை மட்டும் அதிகமாக பாராட்டினால் நல்லது. நம்முடைய கருத்தை கூறுவதாக நினைத்து குறைகளை மட்டும் பகிர்வதை தவிர்ப்பதால் நிச்சயம் சுமுகமாக போகும்...யோசித்து பார்த்தால் சரியே...ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் தனிச்சிறப்பு உள்ளவர்...எல்லாருக்கும் எல்லாம் தெரியாது என்றோ..எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்றோ நினைக்க முடியாது...நம்மால் முடிந்தவரை நன்மையை செய்வோம்...நல்லதை பாராட்டுவோம்...👏👍😊
ஆம் மற்றவர்களையே எப்போது குறை சொல்கிறோம் ஒருமுறை நம்மை பற்றி சிந்தித்தால் பலவற்றை மாற்றி அமைத்து நாம் நம்மை சரி செய்வோம்...எவரிடமும் எதனையும் எதிர்ப்பார்க்காமல் வாழ்ந்திடுவோம் நாம் நம்மை இழக்காமல் என்பதே இதில் மிகவும் முக்கியமானது.👍😊
எதையும் எதிர்ப்பார்க்காமல் இருப்பது
ஏமாற்றத்தை தவிர்க்கும்....
-தொடர்ந்து யோசிப்போம்
No comments:
Post a Comment