Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Saturday, June 13, 2020

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் (Chapter 5)

இந்த புத்தகத்தின் ஐந்தாவது Chapter என்ன சொல்கிறது பார்ப்போம்...வாங்க...
நிச்சயம் கோபத்தை control பண்ண உதவுதா?!👍😊


பாரபட்சம் இல்லாமல் பொசிக்கி விடும் நெருப்பு 🔥 அப்படிப்பட்ட நெருப்பு போல கோபத்தை பொங்கி எழவே விடாமல் இருந்தால் தண்ணீர் வைத்து அணைப்பது போல நல்ல நல்ல எண்ணங்களின் மூலம் நிச்சயம் கோபத்தை தவிர்க்கலாம்....
தலைப்பு அருமையாக வைத்க்திருக்காங்க....
வரமும் கோபமும்....கோபகாரர்,கோபத்தை கட்டுக்குள் வைத்திருப்பவர் மனநிலையை பற்றி பார்த்தாலே...ரொம்பயோசிக்க வைக்கிறது...மேலும் கோபத்தை குறைக்க வழிமுறைகள் பின்பற்றுவது,எல்லாம் நம்மை யோசிக்க வைக்கும் இந்த தலைப்பு..அப்போ எதற்கும் கோபமே வரவில்லை என்றால் வாழ்க்கை ஓர் வரம் தானே!👍🤝

கோபத்தை உடையவனுக்கு கருணை என்பதே இருக்காது..அப்படி கருணை இல்லாமல் வாழ்வது நல்லறம் சார்ந்த வாழ்க்கையாகுமா?
என்ற பெரிய யோசனைக்கு கொண்டு செல்கிறது...
ரொம்ப விகாரமா இருக்கே...
பேசாம கோபத்தை விட்டுவிடுவோமே! 
இவ்வளவு மோசமா இருக்கும் போல 
கோபத்தில் முகம்  
நம்ம முகம் தானே என்று கண்ணாடி பார்த்தால் அவ்வளவே...
நிச்சயம் அந்த கோபம் பறந்திடும் ...
சரி தானே...🤪😊👍


ரொம்ப முக்கியமாக 60 listen/40 speak...செய்யணும் ஆனால் நம்ம 60 speak/40 listen  செய்து கொண்டிருக்கிறோம்....ரொம்ப சின்ன வித்தியாசம் தான் 🤏 அது செய்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்குமே...செய்ய முயற்சி செய்வோமா?!🤔👍



ஏன் இப்படி நடக்கிறது என்பதைவிட
 அவர்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும்... 
இதனால் ஆதாயம் என்ன?சரி போகட்டும்...🧐
என சில பிரச்சனைகள் எதிர் இருப்பவரின் இடத்தில் இருந்து யோசித்தால்  நிச்சயமாக நமக்கு புரியும்... 

மாற்றி யோசிப்போம்...🤔

சின்ன சின்ன விஷயத்தை புரிந்து கொள்வோம்!👍

( பல வருடங்கள் கூட இருப்பவரையும் கூட நாம் புரிந்து கொள்ள து உதவும்)

கோபத்தை தவிர்ப்போம்!
நிம்மதியாய் வாழ்வோம்!😎

                                                       -தொடர்ந்து வாசிப்போம்...





No comments:

Post a Comment