இந்த புத்தகம் தான் படித்து கொண்டிருக்கிறோம்....
அதான!😀யாருக்கு லாபம்....
அருமையாக சொல்லி இருக்காங்க....
நமக்கு எல்லாவற்றிற்கும் கோபம் தான் மூலாதாரமாக உள்ளது...நாம் செய்யும் பாவச்செயலாக கருதினால் நிச்சயம் கோபம் கொள்ள தயங்குவோம்....👍
அப்படியே அடிச்சு நொறுக்கலாம் போல இருக்கும் கோபம் வந்தால்...ஆனால் அதெல்லாம் திரும்ப வாங்குவதும்,வாங்கியதும் நாம் தானே! யோசித்தால் எதற்கு உடைக்கணும்....கட்டுபாடோடு வாழ்வோம் நிம்மதியாக!👍
பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர்...எந்த முகத்தை தேர்வு செய்தால் நன்மை...
எது நம்மை ஆனந்தம் கொடுக்குமோ
அதனையே நாம் பிறருக்கு கொடுப்போம்....சரியா....
எப்போதும் எப்படி இப்படி சிரிச்சுட்டே
இருக்க முடியும் நீங்க நினைப்பது புரியுது....
மனம் கலங்காமல் இருந்தால்
எல்லாம் நன்மையில் முடியும்...
Mother Terasa சொல்லியதை போல்
Smile Generates Smile...
நாம் முதலில் புன்னகை என்கிற விலை மதிப்பற்ற நகையை நகைச்சுவையோடு உணர்ந்து பின்பற்றி வாழ்வில் ஆரோக்கியத்தை பெறுவோம்!🙂😀😁
விடாமுயற்சிக்கு தான் நாம் சொல்வோம் ...
ஆனால் மிக பெரிய அரிய வழியை இவர் வாழ்வில் கடைப்பிடித்துள்ளார் என்பதை அறியும் போதே
நாம் செய்தால் என்ன என்று தான் தோன்றுகிறது....
கோபத்தை அடக்க கூடாது வெளியில் கொட்டவும் கூடாது அப்படி என்றால் எப்படி?🤔
👉இதோ இப்படி......யாரின் மீது கோபமோ அவர் செய்ததை அதே கோபத்தோடு தனியாக அமர்ந்து கதவை சாத்திவிட்டு ஒரு தாளில் எழுதி தள்ளிவிடுங்க....அப்படி எழுதினால் போதுமா?🤔
அதனை எழுதியவுடன் படித்து பார்த்துவிட்டு சுக்கு சுக்காக கோபம் தீர தீர அதனை கிழித்து கிழித்து போடுங்கள்....ஆசுவாசம் அடையும் வரை....மனம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி அடையும்....அதோடு அதனை விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போலாம்....அவ்வளவே....
அருமையான வழி செய்தால் தெரியும்....
வார்த்தைகளை கொட்டாமல்...
நெளிவு சுளிவோடு வாழ்க்கை நகர
இது உதவும் நிச்சயமாக!
- தொடர்ந்து வாசிப்போம்
No comments:
Post a Comment