இந்த புத்தகம் தான் படித்துக்கொண்டிருந்தோம்....
ஏன் நாம் சிரிக்க மறுக்கிறோம்...
இது தான் தலைப்பு....படத்தை பார்த்த உடனே புரியுது...நாம் எதனை தேர்வு செய்ய இருக்கிறோம்...?Chapter 2
ஆமாம் சந்தோஷம் படவே பயம் தான் என்பதில் ஐயமில்லை...
(முன்னாடிலாம் என்னன்னு சொல்லுங்க நாங்களும் சிரிக்கிறோம்...
ஆனால் இப்பொழுது அதெல்லாம் இல்லை...
ஈ ந்னு இளிக்கறது பாரு...இதுல என்ன இருக்கு சிரிக்க என்பது போல சிரிக்கவே யோசிக்கிறோம்....)
குழந்தையை போல எப்பவும் சந்தோஷமாக இருக்க நாமும் முயற்சிக்கலாம்...முடிந்த வரை அழுமூஞ்சியாக இருப்பதை தவிர்க்கலாம்... (சில நேரங்களில் வீட்டில் தான் இருக்கிறோம் என சரியா நம்மள நாம் கவனிச்ச கூட மாட்றோம்...என்று தோணிச்சு)
ஒரு விஷயத்தில் நாம முடிவெடுக்கணும் என்றால் *தற்காலிகமான தீர்வு* நோக்கி ஒரு போதும் செல்ல வேண்டாம்...
*நிரந்திர தீர்வு* தான் என்றும் மனநிறைவைத் தரும்..
*நேற்று* .... நினைச்சும் சந்தோஷம் பட மாட்றோம்
*இன்று* ... நாளை என தள்ளி போடுறோம்
*நாளை* ...மறுநாள் வந்தால் திரும்ப அதற்கு மறுநாள்
என நாம சந்தோஷத்தை தள்ளி போட்டுட்டு தான் இருக்கிறோம்...
இப்படி ஆனால் *வெற்றி* என்பதையும் தள்ளி போடுகிறோம்...
அப்பறம் அப்பறம் என்று...
தோல்வி என்பது தற்காலிகமானது...
வெற்றி உறுதியா கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது ...ஆனால் அதை நோக்கி ஒரு அடியாவது அதற்கு முயற்சி செய்திருக்கிறோமா என்று ஒவ்வொரு நாளும் கேள்வி மட்டுமே கேட்காமல் அதற்கான பயணத்தை துவங்க வேண்டும்...
இந்த chapter 2 ல் நான் எனக்கு யோசித்த விஷயத்தை இங்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்று பதிவு செய்கிறேன்..ரொம்ப நல்ல அனுபவம்...
அந்த காலத்தில காக்கா கல் எடுத்து போட்டு தண்ணீர் மேல வைத்து குடித்த இந்த படத்தோட ஓப்பீடு தான் அருமை..இந்த காலத்தில் தண்ணீர் கீழே இருந்தாலும் straw போட்டு உறிஞ்சு குடிப்பதும்...இந்த பகுதியில் படித்தற்கு ஒத்து போகும் என்று நினைக்கிறேன்...👍😊🙏
இலக்கை நோக்கிய பயணம் புத்திசாலித்தனமாக நகர்வது...
ஓரத்தில் உளியால் கொஞ்சம் செதுக்கிவிட்டு சென்றால் பயணம் உருண்டோடியது போல இலகுவாக இருக்கும் அருமையான படம்....எல்லாரும் செய்வதை தான் செய்வேன் என்றால் இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படலாம்... 👍🙏😊
வேலை செய்தாகணும் ஆளுக்கொரு முயற்சி...கல்லை கயிற்றில் இழுப்பது... கல்லை உடல் பளுவைக் கொண்டு தள்ளுவது.... கல்லை உருளை குழாயின் மீது உருட்டி செல்லுதல்....ஏதோ ஒரு முயற்சி நம்முடைய வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்பதை சொல்லும் படம்...👌🙏👍😊
பளுவை நாம் நம் தோளில் சுமப்பதால் தான் நாம் துவண்டு விடுகிறோம்...பளுவை சக்கரம் உள்ளதில் ஒரு முறை இறக்கி வைத்தால் நாம் கொஞ்சம் பாதையில் சுமுகமாக செல்லவும்,விரைவில் முடிப்பதற்கும் .... இலக்கை நெருங்கி செல்லலாம்
என்பதை உணர்த்தும் படம்👍😊
வெற்றியை அடைய சுற்றி சுற்றி
வெவ்வேறு வழியில் யோசிக்கிறோம்..
நேரடியாக கண் முன்னே வழி இருக்கும்
என்பதை விளக்கும் படமாக உணர்கிறேன்...👆😊👍
இரண்டாவது Chapter முடியும் போது ....ரொம்ப அருமையாக வெற்றி அடைவதை பற்றி பார்த்தோம்....இலக்கை அடைத்தால் மட்டும் சந்தோஷம் என்பது இல்லை...அதற்காக முயற்சி செய்யும் போதும்,செய்த பின்பும் என எப்பொழுதுமே சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாய் வாழ முயற்சிப்போம்...
கவலைகள் மறக்கமட்டுமல்ல!
கனவுகளை அடையவும் மகிழ்ச்சியாய் இருப்போம்!
- தொடர்வோம் புத்தகம் படிக்க....
கவலைகள் மறக்கமட்டுமல்ல!
கனவுகளை அடையவும் மகிழ்ச்சியாய் இருப்போம்!
- தொடர்வோம் புத்தகம் படிக்க....
No comments:
Post a Comment