இந்த புத்தகம் எனக்கு தெரிந்து நல்ல பண்படுத்துவது போல உள்ளது...இப்போ தான் ஐந்தாவது வருகிறோம்..போக போக இந்த ஐந்து நிம்டம் நம் வாழ்க்கையின் முக்கிய நிமிடங்களாக மாறும்...😊👍
யார் அந்த இருவர்.....தான் எப்போதும் நல்ல வழியை தேர்வு செய்வது அல்லது தேர்வு செய்தது கெட்ட வழி என்றாலும் அதனையும் நல்ல வழியாக மாற்ற முயற்சி செய்வது,பின்பு தன்னிடம் இல்லை என்றாலும் பிறருக்கு உதவி செய்யும் மனம் இருந்தால் அவர்கள் உயர்ந்தோர் தானே!
நல்ல பாதை தெளிவாக இருக்கிறது ...நடக்க நடக்க ஏற்கனவே தெரிந்ததால் முன்னேறி
செல்ல மிகவும் நன்மை உண்டாகும்....👍
அதுவே கெட்ட பாதை இருட்டு நிறைந்ததாக உள்ளது...👎மனதிலும் அழுக்கு சேரும்...
அதனை தேர்வு செய்யாமல் இருந்தால்
தானாகவே மூடிடும் பாதையில்லாமல்....
நம் மனதும் சரியான வழியில் செல்லும்....😊👍
ப்ரகாசமான பாதையை தேர்வு செய்வோம்....
அப்படி இல்லை என்றாலும் கவலையில்லை...
நாம் செல்லும் வழியை மிக சிறப்பாக வைத்து கொள்வோம்!உயர்ந்தோராக வாழ்வோம்!
நம்ம கிட்ட கொஞ்சம் இருந்தாலும் நாம் அதை கொடுக்க கூடிய மனநிலையில் இருக்கிறோமா?! அப்படி இருந்தால் நாமும் தான் உயர்ந்த்தவங்க மனதில் நல்ல நல்ல எண்ணங்கள் சேர சேர கெட்ட எண்ணங்கள் வலுவிழந்து ஒன்றுமில்லாமல் போயிடும்....கடவுள் கொடுக்கிற முக்கியமான தேர்வு
இது தான் ...கொடுப்போமா?! மாட்டோமா?!
கொடுக்க கூடிய மனநிலை தான்
சிறந்தது தானா புரிய வரும் அனுபவம் வழியே...பக்குவம்🛣️😊
- தொடர்ந்து யோசிப்போம்
No comments:
Post a Comment