தினம் தினம் நம்மை பண்படுத்தும் இப்புத்தகம் நிச்சயம் நல்ல வழியில் யோசிக்க வைக்கிறது... ஆறாவது தலைப்பில் என்ன சொல்கிறார் பார்ப்போம்... வாங்க!
திருக்குறளில் நாம் கற்க வேண்டியது நிறைய உள்ளது அப்படி ஒரு திருக்குறளை தான் இங்கே மேற்க்கோள் காட்டியுள்ளார்...
யோசிக்க வைக்கிறது....👍🤔
அருமை.. முதலில் நாளைக்கு செய்யலாம்
என தள்ளி போடாமல் இருந்தால்
கடைசி நிமிடத்தில் செய்கிற
அவதியும் இல்லை ...அவசரமும் இல்லை...
ரொம்ப முக்கியமாக tension இல்லை...🤪👍
அச்சச்சோ மறந்திட்டேனே!?
சுத்தமா ஞாபகமில்லையே!
கொஞ்சம் தான் மறந்தேன் பரவால...நினைக்காம இருக்க அருமையான படம்...மொத்த பல்பும் எரியாது...🤔நினைவாற்றலை பெருக்கி நிம்மதியாய் வாழ முயற்சி செய்ய வேண்டும்!👍
எதற்காக வந்தேன்...என்பதை கூட மறந்துவிடும் அளவில் ஞாபகமறதி என்கிறோம்..நினைவு என்கிற ஆற்றல் என்பதால் இனிமேல் அதனை நினைவாற்றல்,
ஞாபகம் ஓர் சக்தியாக ஞாபகசக்தியாக மீட்டு எடுப்போம்...
நம்மீது நாம் முதலில் கவனம் செலுத்துவோம்.🤔👍
சோம்பலால் நிறைய ஆரோக்கியத்தை இழக்கிறோம்...
அதனாலே எல்லா சின்ன வேலையை கூட அப்பறமாக பார்த்துக் கொள்ளலாம் என தோன்றி தள்ளியும் போடுகிறோம்...
கொஞ்சம் கொஞ்சமாக நாம் உடல் பருமன் அடைய
இது தான் முதன்மையானது...
யோசிப்போம்!🤔 தவிர்ப்போம்!
👉தன்னை மீறிய வேலை நேரத்தில் தூங்குவது...
👉படிக்கும் நேரத்தில் தூங்குவது ...
👉நாம் சரியான தூக்கம் இல்லாமல் தவிப்பதை தவிர்த்தால் சராசரியாக 6 - 8 மணி நேரம் தூங்கி நாம் விழிப்புணர்வுவோடு...
சோம்பலை தவிர்த்து வாழ்ந்தால் அப்பறம் தானாகவே
நேர நிர்வாகமும் இருக்கும்...
எல்லாம் சரியாக இருந்தால் நிச்சயம்
நினைவாற்றல் பெருகும்.
குறள் : 605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
Procrastination, forgetfulness, idleness, and sleep,
these four things, form the vessel which is desired
by those destined to destruction.
-தொடர்ந்து யோசிப்போம்...
No comments:
Post a Comment