இந்த புத்தகத்தின் கடைசி Chapter தான் இன்னைக்கு பார்க்கலாம் வாங்க! முடிகின்ற தருணத்தில் அருமையாக பலவற்றை மேற்க்கோள் காட்டியுள்ளார் எழுத்தாளர்...🤝
நட்பில் பொறாமையாக மாறும் போது இழப்பு😡
மேலும் கோபம் ஒரு பசி அடங்காத தீ 🔥 போல தான்...
நான் அதற்கு அடிமை இல்லை அடிமையாகவும் கூடாது...
ஒரு போதும் தோற்கக்கூடாது... நிச்சயம் கடைப்பிடிப்போம்😊👍
அருமையாக தலைப்பு... விலை மதிப்பில்லாதது எப்படி? கோபம் நம்மை யாராவது குறை கூறினாலோ அவர்கள் நம்மை சொல்ல தகுதி உள்ளதா என நாம் யோசிப்போம்...
பின்பு சிந்திப்போம்...அவரிடம் நாம் கோபப்பட வேண்டுமா....
கோபம் நம்மை தாழ்த்தும்...ஒரு போதும் நன்மையல்ல...
நாம் நம் சொந்தபந்தம்...
நட்பு என அனைத்தும் இழக்கிறோம்..
அப்போது கோபம் என்பது விலை மதிப்பில்லாதது
ஆகிறது தானே!😡😊👍
கோபத்தில் ஓர் அறையில் சென்று என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று சொன்னால்....
கத்துவது ....குத்துவது....போட்டு உடைப்பது....என எல்லாம் செய்தவுடன் மனம் திருப்தி அடையலாம்...
ஆகையால் உடலிலும் மாற்றம் ஏற்படுகிறது என ஒரு ஆய்வில் சொல்லியுள்ளனர்...
எனினும் நம்மால் பொறுமை காக்க இயலும் ...
பொறுமை கடலினும் பெரியது என்பதே தவறு...
பொறுமைக்கு எல்லையில்லை....
பொறுத்து பொறுத்து உடலை பாதிக்காதவாறு
கோபத்தை தவிர்ப்பதே மேல்!
நாம் கோபப்படாமல் இருக்கலாம் சரி...👍
எதிர் இருப்பவர் கோபப்பட்டால்
நாம் கடைப்பிடிக்க வேண்டியது தான் பொறுமை!
கஷ்டம் தான்...ஆனால் சமாளிப்போம்...
எவ்வளவோ பார்த்திட்டோம் இது என்ன ஜுஜுபின்னு கோபத்தை எதிர் கொள்ள விழிப்புணர்வோடு கையாளவும்!
கோபத்தை ஆங்கிலத்தில்
Anger என்போம்...அதில் ஒரே ஒரு எழுத்தை முதலில் சேர்த்தால் Danger என்ற ஆபத்தாய் மாறி விடுகிறது...
அதனால் கோபம் என்ற உணர்வை அன்பின் வசத்தால் நிச்சயம் வெல்ல இயலும்...முயற்சி செய்வோம்... 😊👍🙏
இனி நாம் கோபம் வரும் போது தவிர்ந்திடுவோம்!
இப்புத்தகம் படித்த பயனை பெறுவோம்!
Control கோபம் என மனதினுள் சொல்லிக்கொள்வோம்!
மிக்க நன்றி 👍
No comments:
Post a Comment