மூன்றாவது தலைப்பு...
நிச்சய்ம் நம்மை யோசிக்க வைக்கிறது....👍🤔
எல்லாவற்றிலும் அவசரம் உடனே..
உடனே...ந்னு யோசிக்க கூட நேரமில்லாமல் டக் டக் ந்னு பண்ணுவதாக..
வெளியில் சிரிசுட்டு
மனதில் அழுவது...
பிறர் நலம் என நினைத்து
நம்மை நாம் தொலைத்து விடுகிறோம்....
இதற்கு அழகான கதை தான் ஞாபகம் வருகிறது....இரண்டு பிள்ளைகள் மரத்தில் தொங்கி கொண்டு விளையாடும் போது ஒரு குழந்தையின் பெற்றோர் பார்த்து.....
தம்பி விழுந்தாடுதே டா...
விழுந்திடுடாத..என்று கத்துகிறார் ஒரு பிள்ளையின் பெற்றோர்....🙅♂️🙆♀️😳🥶
அப்போ தான் அவன் அவர்கள் கத்தினதில் பயந்து கீழே விழுந்து விடுகிறான்...விழுந்திடாதே என்று சொல்வது தன் குழந்தை மீது வைத்த அதீத அக்கறை தான் இருந்தாலும் அந்த வார்த்தை விழுந்திட வைத்துவிட்டது....🙆♀️😳👎
இன்னொரு பெற்றோர் தம்பி ஜாக்ரதை ....
கெட்டியமா பிடித்து கொள் ..உன்னால் முடியும் என நம்பிக்கை கொடுத்தாங்க...
அவன் ஜம்முன்னு ஏறி உட்கார்ந்தான் பாருங்க ...
அங்க தான் இந்த பாஸிடிவ் எண்ண அலைகள்
உணர முடிந்தது....👍🙂🙋♂️👏👌
ஒரு மரம் நல்லா வளர்ந்து இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள மண்ணின் தரம் நல்லா இருந்தாலும் அதற்கு தேவையானது
சரியாக அமையவில்லை என்றால் அந்த மரம் பூத்து குலுங்காது....
அதே போல மண்ணின் தரமில்லாமல் அதற்கு தேவையானது இருந்தாலும் சரியாக காய் காய்க்காது...
இரண்டுமே நன்றாக சம அளவிலானதாக இருக்கும் போது அந்த மரம் நன்றாக பூ பூத்து காய் கனிகளை தருவதோடு நல்ல நிழலையும் தரும்....
நம் வாழ்வு சிறக்க நாம் தான் சரியாக கையாள வேண்டும்....
நல்லது நடந்தாலும்( குதிக்க வேண்டாம்)
கெடுதல் நடந்தாலும்(சோகமும் வேண்டாம்)
சமநிலையில் இருப்போம்...
செம்மையாக வாழ்வோம்...
பிறருக்கு முடிந்தவரை உதவி செய்வோம்!👍🙂😀
- தொடர்ந்து யோசிப்போம்
No comments:
Post a Comment