Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, June 23, 2020

யதார்த்தமாக படிக்கலாம் வாங்க!சிறகை விரி!பற...என்ற புத்தகம் ( பகுதி 3)


இந்த புத்தகம் ரொம்ப அருமையாக 
நம்மை சுற்றி இருப்பதை கொண்டு புரிய வைத்து இருக்காங்க...
வாங்க மூன்றாவது பகுதி என்ன சொல்கிறது பார்ப்போம்!😊👍

தலைப்பிலே புரிந்து இருக்கும்...சும்மா..சும்மான்னு சொல்வோம் ஆனால் ஏதோ விஷயம் இருக்கும்...ஆனால் எதையும் பற்றி கவலையில்லாமல் சும்மா இருப்பது சுகம் தானே! நடைமுறையில் சாத்தியமா!? யோசிப்போம்...

யோகா செய்வது மிகவும் எளிது..அதை செய்வதற்கு முன்பு அமைதியாய் வாயை மூடி உட்கார சொல்வாங்க! நிச்சயமா வாய் தான் மூடும் ஆனால் மனசு அப்போ தான் அமெரிக்காவிற்கே போயிட்டு வந்திடும்...பயிற்சி செய்ய அந்த மனமும் அமைதி பெறும்...அது தான் அங்க சிறப்பு அம்சமே! மௌன விரதம் என்பதை பற்றி ரொம்ப அருமையாக சொல்லி இருந்தாங்க...நாம் இருந்துகிட்டே இல்லாத மாதிரி இருப்பது தான்...எந்த ஒரு  செயலிலும் ஈடுபடாமல் இருப்பது  தான் அந்த விரதத்தில் சிறப்பு.ஆனால் அப்போ தான் அபிநயம் காட்டுவது..தாளில் எழுதுவது என சிலர் செய்வர்..மௌனத்திற்கு பிறகு வார்த்தைகள் மிகவும் அழகாக இருக்கின்றன என்பதை நாமும் புரிந்து கொள்ள முடியும்..😊👍

உண்மையில் "சும்மா இரு" என்றால்  மனதுள்ளும் நாம் வார்த்தைகள் இன்றி  இருப்பது...இதோ இந்த தரையை போல... ஏனென்றால் கழுவி காயப்போட்ட தரை மாதிரி வெறிச்சோடி இருக்க வேண்டும்..எந்த ஒரு கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பது என்பது ஒரு சுகம் தானே!
அருமை👌👍😊

No comments:

Post a Comment