Wake up! Within.

Wake up! Within.
Eradicates Viles...Enhances Values

Tuesday, June 23, 2020

புத்தகம் வாசிப்போம்...வாங்க...Control கோபம் (Chapter 8)


இந்த புத்தகம் தான் படித்துக் கொண்டிருக்கிறோம்...எட்டாவது Chapter ல் என்ன சொல்றாங்க பார்ப்போம்...கோபத்தை கையாள பொறுமையும் அவசியம் என்று புரிய வருகிறது..😊👍

அனைவருக்குமே  இருக்கக்கூடிய மூன்று குணங்கள்...                     
  😊ஸத்வ குணம் ( அமைதி, தூய்மை)           
 😀ரஜோ குணம் (பெருமிதம்,ஆசை)       
 😡 தமோ குணம் ( குழப்பம்,பழி வாங்குதல்)
 இம்மூன்றில் மோசமான தமோ குணம் இயற்க்கையில் இருந்தாலும் அதனை வெல்ல வேண்டியது மனோபலம் தான்!பலர் கோபப்பட்டு நிறைய இழந்ததை பார்த்தும் கேட்டும் நாம் ஏன் இன்னும் அதனை சுதாரித்து நடந்து கொள்ளக்கூடாது? யோசிப்போம்!
நிறைய கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போனவர்
திரு ஐசக் நியூட்டன் அவர்கள்,
ஒரு முறை அவரின் 20 வருட உழைப்பை அவரின் நாய் அங்கும் இங்கும் சுற்றி விளையாடி மெழுகுவர்த்தி சாய்ந்து 
அனைத்தும் தீ 🔥 க்கு இரையாகின...
வெளியே சென்று திரும்ப வந்தவர் நாயை தடவி கொடுத்தாராம்....
சாம்பலுக்கு இரையானது தன்னுடைய தவறும் அடங்கியுள்ளது...
நாய்க்கு என்ன தெரியும் என்ற யோசனையில் 
கோபத்தை அடக்கி பொறுமை காத்தார்...
அது போல் எதிர் இருப்பவரின் மனநிலையை யோசிக்க வேண்டும்...
குழந்தை தண்ணீர் கொட்டிவிட்டால் அல்லது ஏதேதோ காரணங்களுக்கு அடிப்பது,
திட்டுவது என நாம் செய்வதை யோசிப்போம்...
நம் உடல்நிலையும் அடங்கியுள்ளது...🤔👍
எதிர் இருப்பவர் கோபத்தோடு பேசினாலும்
 நாம் இனிமையாக பேசுவோம்...
நான்கு விரலும் தன்னை பற்றி சொன்னது தான் 
இங்கே ஞாபகம் வருகிறது...
நான்  பெரியவன் என நடுவிரல்  கூறியதாம்...
நான் சுட்டிகாட்டுவேன்...
நான் விலையுயர்ந்த பொருளை அணிகிறேன்...
நான் மிக சிறயவனாக இருந்தாலும் முன்னால் உள்ளேன்..
இப்படி கூறியதாம் ஒவ்வொரு விரலும் 
அங்கே கட்டை விரல் வந்து நான் இல்லை என்றால் 
நீங்கள் எவரும் இயங்க முடியாது 
ஆகையால் அவரவர் கர்வம் கொள்ள வேண்டாம் என்றதாம்...
அனைவரையும் சார்ந்து தான் உள்ளோம் ...
ஒருவர் இல்லை என்றாலும் கஷ்டம் தான்...
ஆனால் நான் இல்லை என்றால் இயங்கவுதே கஷ்டம் என்றவுடன் புரிந்து கொண்டதாம் மற்ற விரல்கள்....
அன்பாக இருப்பது தான்
 அந்த கட்டைவிரலுக்கு சமானமாக கொள்ளலாம்!      
அன்பால்  வெல்வோம்! அமைதியை அடைவோம்! 😊👍

                      - தொடர்ந்து வாசிப்போம் கோபத்தை கட்டுப்படுத்துவோம்...









No comments:

Post a Comment